• Breaking News

    தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில் முகாமில் பொது மக்களிடமிருந்து மனுக்கள் வாங்கிய எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ


    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் (18/06/2025) நடைபெற்ற உங்களை தேடி, உங்கள் ஊரில் முகாமில் பங்கேற்ற பொது மக்களிடமிருந்து தாம்பரம் மாநகர செயலாளர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, மேலும் பெருங்களத்தூர் RMK நகரில் வசிக்கும் 196 குடியிருப்போர்களின் 50ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு பட்டா கிடைத்தது. முதல் தவணையாக 30 பேருக்கு பட்டா சான்றிதழ்களை வழங்கினார்.

     பின்னர் திருவஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி சுரேஷ்பாபு அவர்கள் மழைக்காலங்களில் மழைநீர்  பாதிக்கப்படும் இடங்களை கல்வெட்டு அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு மற்றும் முடிச்சூர் 11வது வார்டு உறுப்பினர் புனிதா ராஜா அவர்கள் 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை கிராம கணக்கில் சேர்ப்பதற்கான கோரிக்கை மனுவை எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

     இந்நிகழ்வில் தாம்பரம் மாநகர மேயர் க.வசந்தகுமாரி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் என்.முரளி, தாம்பரம் வட்டாட்சியர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் சி.சுரேஷ், வட்ட செயலாளர் மு.வினோத் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

    No comments