உலக தந்தையர் தின விழாவை முன்னிட்டு சிவா விஷ்ணு நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Monday, June 16, 2025

உலக தந்தையர் தின விழாவை முன்னிட்டு சிவா விஷ்ணு நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

 


செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட சிவா விஷ்ணு நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் உலக தந்தையர் தின விழாவை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா குடியிருப்போர் நல சங்கம் தலைவர் மற்றும் முடிச்சூர் குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு செயலாளர் பா.தவமணி தலைமையில் குடியிருப்போர் நல சங்கம் செயலாளர் ஆர்.ஏ.ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார், குடியிருப்போர் நல சங்க துணை தலைவர் சந்தானகிருஷ்ணன், துணைச் செயலாளர் கமலக்கண்ணன், தணிக்கையாளர் இலட்சுமணன், மகளிர் அணி செயலாளர் அபிராமி மோகனரங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ சாஸ்தா சாரிடபுள் டிரஸ்ட் செயலாளர் தா.மு.த.ஜோதிலிங்கம் அவர்கள் ஏற்பாட்டில் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஒரு நபர்களுக்கு 1500 ரூபா என்று 15 நபர்களுக்கு ரொக்கம் தொகை கேடயம் வழங்கி சால்வை அணிவித்து மரியாதை செய்து  வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர் இதில் முடிச்சூர் குடியிருப்போர் நல சங்கம் கூட்டமைப்பு தலைவர் பா.தாமோதரன் மற்றும் முடிச்சூர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து  உலக தந்தையர் தின விழாவில் அனைத்து தந்தைகளும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இறுதியில் குடியிருப்போர் நல சங்க பொருளாளர் ஏ.இளங்கோவன் மற்றும் முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் ஆகியோர் நன்றி உரையாற்றினார்.

No comments:

Post a Comment