செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர் பஞ்சாயத்து யூனியன் உட்பட்ட ஏரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பாக நன்மங்கலம் ஏரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏரிகளை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என்று நன்மங்கலம் ஏரி பாதுகாப்பு குழுவினர் சார்பில் துப்புரவு பணியாளர்கள் உடன் இணைந்து சமூக ஆர்வலர்கள் ஜலரக்ஷனா, சிட்லப்பாக்கம் ரைசிங் குழு, எக்ஸ்னோரா, இஎஃப்ஐ , கல்லூரி மாணவர்கள் இணைந்து செம்பாக்கம் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், நல சங்கங்கள், நன்மங்கலம் ஏரி பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நன்மங்கலம் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்தனர். மற்றும் குப்பைகளை கொட்டுவதை தடுத்து நிறுத்துவோம், போன்ற வாசகம் அடங்கிய அட்டைகள் ஏந்தி கொண்டு கோஷங்கள் எழுப்பியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நன்மங்கலம் ஏரிகளை எப்படி பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஏரியில் சுற்றியுள்ள அனைத்து தன்னார்வலர்கள், அசோசியேஷன் நகர் மற்றும் குடியிருப்பு வாசிகள் ,என்ஜிஓ மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், என்சிசி மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Monday, June 9, 2025
Home
செங்கல்பட்டு மாவட்டம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நன்மங்கலம் ஏரி சுற்றுவட்டார பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து சுத்தம் செய்தனர்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நன்மங்கலம் ஏரி சுற்றுவட்டார பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து சுத்தம் செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment