தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சிமெண்ட் சாலை, அங்கன்வாடி ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ
செங்கல்பட்டு மாவட்டம் அகரம் தென் ஊராட்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சமுதாய நடக்கூடம் சுற்றுச்சுவர் 25 லட்சம், காமராஜர் தெரு சிமெண்ட் சாலை 10.22 லட்சம், குறித்தும் அங்கன்வாடி மையம் 17.25 லட்சம் ஆகிய பணிகளுக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர், மாநகர கழகச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ அவர்களால் பூமி பூஜை போடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சி.கே.ஜெகதீஸ்வரன், துணைத் தலைவர் அரவிந்த் மனோகரன், வார்டு உறுப்பினர்கள் பா.சரவணன், ஆ.ராமச்சந்திரன், மேகளா சேட்டு, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பி.இ.ஆர்.இன்பநாதன் வட்டச் செயலாளர் டி.ரங்கநாதன், இ.எம்.குமார், பி.குமார், ஜே.குமார், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய செயற்பொறியாளர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments