• Breaking News

    கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு செம்மொழி நாள் பொதுக்கூட்டம் ஆரம்பாக்கத்தில் நடைபெற்றது


    ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற  இந்த பொது கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் டி.மணி, ஒன்றிய துணை செயலாளர் டி.மஸ்தான். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜி.ரமேஷ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் அங்கமுத்து, ஒன்றிய நிர்வாகிகள் உதயகாந்தம்மாள். ஏசுரத்தினம் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மு.பகலவன், எம்.எல்.ரவி, கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, மு.கதிரவன், பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.குணசேகரன், வழக்கறிஞர் பி.வெங்கடாசலபதி திமுக ஆட்சியின் சாதனைகள், தமிழ் மொழி வளர்ச்சிக்கு  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய பணிகள் குறித்து பேசினர்.

    இதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கி மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், திமுக தலைமை கழக பேச்சாளர்கள் தமிழ் சாதிக், கரூர் முரளி, ராஜ ராஜேஷ்வரி சிறப்புரை ஆற்றும் போது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் எப்போதும் தமிழ் தலைநிமிர்ந்து நிற்பதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து நிகழ்வை ஒட்டி 1000பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் வழங்கினார்.இந்த கூட்டத்தில் மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் கே.ஆறுமுகம் பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே ஆர் விக்கி தோக்கமூர் கிளை பிரதிநிதி மு ஜெயராஜ். தகவல்  தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் பிரதாப், சரண்ராஜ், மாவட்ட பிரதிநிதி பரத்குமார், பாக ஒருங்கிணைப்பாளர் ஆ.மு.வாசு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கே.தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    No comments