• Breaking News

    ராஜ்யசபா எம்பியாக கமல்ஹாசன் பதவி ஏற்கும் தேதி அறிவிப்பு


     இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழும் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கி அரசியலில் கால் பதித்தார். இவர் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியா கூட்டணியில் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் போட்டி இன்றி எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வருகிற 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எம்பியாக பதவி ஏற்க இருப்பதாக தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எம்பி ஆக பதவி ஏற்கும் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    No comments