காவல் நிலையம் அருகே வாலிபர் வெட்டி படுகொலை..... திமுக கவுன்சிலர் கணவன் உட்பட 5 பேர் கைது..... - MAKKAL NERAM

Breaking

Monday, August 11, 2025

காவல் நிலையம் அருகே வாலிபர் வெட்டி படுகொலை..... திமுக கவுன்சிலர் கணவன் உட்பட 5 பேர் கைது.....

 


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினியின் கணவர் சுதாகர் (45) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவினேஷ் (21) ஆகியோருக்கு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி, சுதாகரை அவினேஷ் கத்தியால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட அவினேஷ், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஒரு வாரத்திற்கு முன் ஜாமீனில் வெளியே வந்த அவர், தினமும் ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையொப்பமிடும் நிபந்தனையின் பேரில் வருகை தந்து வந்தார்.



இந்நிலையில், நேற்று  காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வெளியேறிய அவினேஷை, சுதாகர் தலைமையிலான 5 பேர் கொண்ட மர்ம கும்பல் துரத்திச் சென்று, காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் கத்தியால் சரமாரியாக வெட்டியது. படுகாயம் அடைந்த அவினேஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.



காவல்துறையினர் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் உயிரிழந்தார்.



இந்த சூழலில், சுதாகர், ரீகன், ஆனந்த், வினித், சுரேஷ் ஆகிய 5 பேரும் கத்தியுடன் ரத்தினகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பழிக்குப் பழி கொடூரமாக நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை டிஎஸ்பி இமயவர்மன், ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment