• Breaking News

    தென்காசி: தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 588 பேருக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர், எம்.பி. வழங்கினர்


    தென்காசியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 588 பேருக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், டாக்டர் ராணிஸ்ரீகுமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

    தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தென்காசி எம்.பி. மருத்துவர். ருhணி ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணிக்கு தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினர்.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் 112 தனியார் நிறுவனங்கள் மற்றும் 3 திறன் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 2832 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உட்பட 588 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், .ரம்யா, திட்ட இயக்குநர், மாநில ஊரகநகர்புற வாழ்வாதார இயக்கம் மதி இந்திரா பிரியதர்ஷினி, ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி முதல்வர்.பீர்முகைதீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    No comments