புளியங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம் - MAKKAL NERAM

Breaking

Sunday, August 17, 2025

புளியங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புளியங்குடி மேற்கு கிளை சார்பில் 79 வது இந்திய சுதந்திர தினம் மற்றும் இளைஞர்கள் எழுச்சி மண்டல மாநாட்டை முன்னிட்டு சிறப்பு இரத்ததான முகாம் புளியங்குடி நகராட்சி தைக்கா தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் அப்துல் பாசித் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் முஹமதலி பிலால், அப்துல் பாசித், மாவட்ட மாணவரணி செயலர் ரபீக் ராஜா, தொண்டரணி செயலர் ஷேக் தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் சுதன் திமேத்யேயு தொடங்கி வைத்தார்.


அரசு மருத்துவர் முத்துராமன் தலைமையிலான மருத்துவ குழுவினர்  42 யூனிட்கள் இரத்தத்தை  கொடையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர். ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இம்முகாமிற்க்கான ஏற்ப்பாட்டினை  மாவட்ட மருத்துவ அணி செயலர் அப்துல்லாஹ், கிளை தலைவர் முஹமது நாசர், செயலாளர் முகம்மது யூசுப், பொருளாளர் இனாமுல்ஹக், நூர் முஹம்மது, துணை செயலாளர்கள் சும்சுதீன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில்கிளை மருத்துவ அணி செயலாளர் அபூபக்கர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment