தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 2 பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சயினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதன்படி துவாரகா விரைவுச்சாலையின் டெல்லி பிரிவு மற்றும் நகர்ப்புற விரிவாக்க சாலை-II (UER-II) திட்டம், அலிபூர்-திச்சான் கலான் நகர்ப்புற விரிவாக்க சாலை-II (UER-II) திட்டம், மற்றும் ரூ.5,580 கோடி மதிப்பிலான பகதூர்கர், சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளுடன் கூடிய திட்டங்கள் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment