இன்று நான் வெற்றி பெற்றேன்..... விஜய் வேறு உயரத்துக்கு போய்விட்டான்...... பிரபல நடிகர் வீடியோ வைரல்......

 


இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், காமெடி நடிகர் தாமு, நடிகர் விஜயைப் பற்றி பேசியது வைரலாகி வருகிறது. அவர் ஒரு நிகழ்ச்சியில், ஜெனிவாவில் நடந்த மிமிக்ரி போட்டியைப் பற்றி குறிப்பிட்டார். அந்தப் போட்டியில் 40 நாடுகள் பங்கேற்றன, தாமு “ஜுராசிக் பார்க்” படத்திற்கு மிமிக்ரி செய்து வெற்றி பெற்றார். அந்த வெற்றிக்கு முழு காரணமாக விஜய் இருந்ததாகவும், அவர் தனக்கு பக்கபலமாக இருந்ததாகவும் தாமு உருக்கமாகக் கூறினார்.


தாமு மேலும் கூறுகையில், “இன்று நான் வெற்றி பெற்றேன், அதேபோன்று விஜய் வேறு உயரத்துக்கு போய்விட்டான். அவன் தான் என் நண்பன், இளைய தளபதி விஜய்,” என்று பெருமையுடன் பேசினார். இந்த வீடியோ விஜய் ரசிகர்களை மிகவும் கவர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Post a Comment

0 Comments