இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் யார் தெரியுமா.?
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்ததால் (DREAM11) ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பி.சி.சி.ஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் (BCCI) பிசிசிஐ உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார்.
இதனால் ஆசிய கோப்பை தொடல் ஸ்பான்சர் இல்லாத ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போலோ டயர்ஸ் 579 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பை வென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகள் நீடிக்கும் மற்றும் 121 இருதரப்பு விளையாட்டுகளையும் 21 ஐசிசி போட்டிகளையும் உள்ளடக்கியது எனவும் தக்வல் வெளியாகி உள்ளது.
No comments