தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய,மாவட்ட கவுன்சிலர்,பெருந்தலைவர் போன்ற பதவிகளில் தனது மனைவி இருந்தால் அந்த பதவியை கணவன்மார்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து கொண்டு வலம் வருவார்கள் என்பதை பார்த்திருப்போம். ஆனால் திண்டிவனம் மாவட்டத்தில் கிராண்டிபுரம் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் தனது கணவரின் பதவியை கைப்பற்றி தானே ஊராட்சி மன்ற தலைவர் என்ற அதிகார மமதையில் வலம் வருகிறார் மனைவி. இந்த கூத்தை நீங்களே பாருங்கள்.....
![]() |
| ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் |
திண்டிவனம் மாவட்டத்தில், கிராண்டிபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் குடும்ப உறுப்பினர் அதிகாரமற்ற தலையீடு மற்றும் பொதுக்குடிநீர் தொட்டி பழுதுபார்ப்புக்காக வசூலிக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தை பஞ்சாயத்து தலைவரின் மனைவி மோசடி செய்துள்ளார் என வழக்கறிஞர் திலீப்குமார் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
![]() |
| ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி விஜயா |
இது குறித்து அவர் தெரிவிக்கையில் நான் திலீப்குமார் திண்டிவனம், கிராண்டிபுரம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் அன்பழகன் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவரின் குடும்ப உறுபினர்களான அவரின் மனைவி விஜயா மற்றும் மகன் சரத்குமார் ஆகியோர் அதிகாரமற்ற முறையில் பஞ்சாயத்து வேலைகளில் அதிகார தலையீடு செய்வதோடு மட்டுமல்லாமல் பல மாதங்களாக பராமரிக்காமல் இருந்த பொதுக்குடி நீர் தொட்டியை சரி செய்து தர மனு அளித்தும் எந்த நடவடிக்கைகயும் எடுக்கப்படவில்லை. பஞ்சாயத்தில் பணம் இல்லை என்று கூறி அடிப்படை வசதியான குடி நீர் வசதி கூட ஏற்படுத்தி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் சந்தித்து ரூ.13000 தந்தால் சரி செய்து விடுகிறேன். என்று உத்திரவாதம் அளித்து கடந்த பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி ரூ.13000 அவரது மகன் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப சொல்லி வசூலித்தனர். ஆனால் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு இப்போது வரை பழுது பார்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,தொட்டிக்கு எந்த பராமரிப்பும் செய்யப்படவில்லை,அந்த பணம் தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்தையும் கோபத்தையும்,வெளிபடுத்துகின்றனர்.இது மிகவும் கடுமையான பொது நம்பிக்கை துரோகம் மட்டுமல்லாமல் அரசு பணியின் பெயரில் மோசடி செய்யும் செயலாகும் அதுமட்டுமில்லாமல் பண ஆதாயம் தொடர்பான தலையீடு மாநில அரசின் ஊழல் ஒழிப்பு சட்ட தண்டனைக்கு உட்பட்டது. மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பொது மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் நிதி உதவிகளில் தலையீடு,ஊழியர்களுக்கு அதிகாரமின்றி உத்தரவு வழங்குதல் போன்ற பல சட்டத்தினை மீறி செயல்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் குழப்பமடைகின்றனர். இது தலைமை அதிகார துஷ்பிரயோகம். பஞ்சாயத்து சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே சம்பந்தப்பட்ட நபரின் தலையீடுகளை நிறுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணியின் நிழலில் மோசடி,நம்பிக்கை மீறல் பொதுமக்களுக்கு நட்டம் ஏற்படுத்தியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
![]() |
| மாவட்ட ஆட்சியர் சேக் அப்துல் ரஹ்மான் |
இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிராண்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகனிடம் பேசிய போது நான் என்ன.? என் மனைவி என்ன.? எல்லாம் ஒன்று தான் என நம்மிடம் தெரிவித்தார். நாமும் அவரின் திமிர் பேச்சுக்கு மக்கள் வாக்களித்து உங்களை தான் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். உங்கள் மனைவியை அல்ல என அவருக்கு புரிய வைத்தோம். மேலும் அவர் கூறுகையில் பஞ்சாயத்தில் நிதி இல்லை அப்படி,இப்படி என மழுப்பினார்.வாங்கிய பணத்தை இந்த மாதம் கொடுத்துவிடுகிறேன் என தெரிவித்தார்.
மேலும்,இது தொடர்பாக திண்டிவனம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்ட போது விரைவில் குடிநீர் வசதி ஏற்படுத்திவிடுவோம் சார். கணவரின் பதவியில் நீங்கள் தலையிட வேண்டாம் என சொன்னால் நம்மை வீடியோ எடுப்பது மட்டுமல்லாமல் நாம் பேசுவைதை போனில் பதிவு செய்து அவர்கள் மிரட்டும் தோனியில் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்து ஒரு ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் மக்களுக்கு தேவையானதை செய்வது இல்லை. ஆனால் சட்டவிரோதமாக கணவரின் ஊராட்சி மன்ற தலைவரின் பதவியில் தலையிட்டு தானே ஊராட்சி மன்ற தலைவர் என மனைவி செயல்படுகிறார். இவரது ஆட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா என பொருத்திருந்து பார்ப்போம்.




0 Comments