அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நோபல் பரிசு கொடுத்தாக வேண்டும்..... அடம்பிடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்.......

 



ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 80-வது அமர்வின் பொது விவாதக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று உரையாற்றினார். அப்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முன்னாள் மோதல்களை மேற்கோள்காட்டிய அவர், குறிப்பாக “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து பேசினார்.அவர் கூறியதாவது: “போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் காட்டிய தீவிர பங்களிப்பிற்கு பாகிஸ்தான் தனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

எங்கள் பகுதியில் அமைதி நிலைபேறுக்கு அவர் செய்த பணி குறிப்பிடத்தக்கது. அதை அங்கீகரிக்கும் வகையில், பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது. இது நாங்கள் செலுத்தும் குறைந்தபட்ச நன்றிக்கடன். டிரம்ப் சரியான நேரத்தில் தலையீடு செய்யவில்லை என்றால், அதன் விளைவுகள் பேரழிவாக முடிந்திருக்க வாய்ப்பு இருந்தது” என அவர் கூறினார்.இந்த உரை சமூக வலைதளங்களிலும், இருநாட்டு அரசியல் சுற்றளியிலும் கவனம் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளிப்படையாக டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் பங்கு குறித்து தெரிவித்து வந்தாலும், இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதின் பின்னரே, போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது என இந்தியா தெரிவித்துள்ளது. இதில் எந்தவிதமான மூன்றாம் தரப்பு தலையீடும் இல்லை என்ற நிலைப்பாட்டை இந்தியா தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments