• Breaking News

    உண்மை நிரூபிக்கப்பட்டால் இனி கபடி விளையாடமாட்டேன்..... பவன் ஷெராவத்

     


    12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இதுவரை 28 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளது. மேலும் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் கட்ட ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. அடுத்த கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது . தமிழ் தலைவாஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்கு நட்சத்திர வீரரான பவன் ஷெராவத் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மேலும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணியில் இருந்து பவன் ஷெராவத் திடீரென்று நீக்கப்பட்டார்

    ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகளால் பவன் ஷெராவத்தை அணியில் இருந்து நீக்குவதாக தமிழ் தலைவாஸ் அணி தெரிவித்தது.

    இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக பவன் விளக்கம் அளித்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது,

    சில வருடங்களுக்கு முன்பு தனது அறுவை சிகிச்சை மற்றும் மீட்புக்கு உதவியதற்காக தமிழ் தலைவாஸ் அணிக்கு நன்றி. இந்த சீசனில் அணியை மேம்படுத்த நிறைய திட்டங்களை வகுத்தோம். ஆனால் அணியில் ஒரு குறிப்பிட்ட நபர் காரணமாக, எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. அணி என்னை ஒழுக்கமற்றவர் என்று அழைத்தது. நான் இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். ஒழுக்கம் என்றால் என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும். என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், மீண்டும் கபடி விளையாட மாட்டேன் என நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். என தெரிவித்துள்ளார்

    No comments