வெளிநாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி நிறுத்தம்..... டிரம்ப்க்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.....

 


அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி அளித்து வந்தது. இந்த நிதி வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவ பயன்பாடு, தடுப்பூசி, நலத்திட்ட பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, வெளிநாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய்) வெளிநாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வெளிநாடுகளுக்கான நிதியுதவியை டிரம்ப் நிறுத்தியதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நிதியுதவியை நிறுத்தி ஜனாதிபதி பதவியை அதிகாரத்தை டிரம்ப் தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடுகளுக்கான நிதியுதவியான 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை நிறுத்திவைத்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு டிரம்ப் நிர்வாகத்திற்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments