• Breaking News

    காரைக்கால்:சுழலும் மின் விளக்கு (FANCY CRYSTAL LIGHT) அற்பணிப்பு நிகழ்வு நடைபெற்றது



     காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினம் சட்டமன்ற உறுப்பினர்  நாக தியாகராஜன் தலைமையில், திருமலைராயன் பட்டினம் மஹான் செய்யது அப்துல் ரஹ்மான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்காவுக்கு சுழலும் மின்விளக்கை நாகூர் சித்திக் சேவை குழுமம்  தர்ம அறக்கட்டளை சார்பாக தர்காவுக்கு வழங்கப்பட்டது. 

    சேவை குமுமம்  அறக்கட்டளை நிறுவனர் , ஜனாப், நாகூர் சித்திக்,  நாகூர்- நாகப்பட்டினம் இரயில் உபயோகிப்போர் நலசங்கம் தலைவர் நாகை எஸ்.மோகன், நாகூர் தர்கா ஆதினம்- தினத்தந்தி செய்தியாளர்  சாபுனி சாஹிப் நிஜாமுதீன், தர்கா டிரஸ்டி ஜனாபா, ரெஜியா, நாயிப் காஜியார் ஜனாப்,ஹாஜி ஏ.ஜமாலுதீன், வக்பு நிர்வாக சபை உறுப்பினர் ஜனாப், ஒ.அப்துல் ஜெப்பார், சமூக ஆர்வலர் ஜனாப் ஜே.தௌபீக், ஜனாப், முஹம்மது பாஹிம், மற்றும் திருபட்டினம் தர்கா நிர்வாகிகள்,  திருபட்டினம் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். 

     காரைக்கால் - திருநள்ளார் - பேரளம் இரயில் பாதை திறப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். தர்கா பாதைக்கு தார்சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் அறக்கட்டளை சார்பாகவும், மற்றும் அங்கு வருகை புரிந்தவர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. செய்து தருவதாக உறுதி அளித்தார். நன்கொடை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    நாகை செய்தியாளர்: ஜி.சக்கரவர்த்தி

    No comments