கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் தனக்கு படுக்கை, தலையணை வழங்க கோரி பெங்களூரு சிட்டிசிவில் கோர்ட்டில் நடிகர் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு மீது விசாரணை நடத்திய கோர்ட்டு, கர்நாடக சட்ட சேவை ஆணையம் சிறைக்குள் சென்று தர்ஷனுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல செய்ய உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, சட்ட சேவை ஆணையமும் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதையடுத்து, தர்ஷன் தாக்கல் செய்த மனு மீது சிட்டிசிவில் கோர்ட்டில் நேற்று இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றிருப்பதாக நீதிபதி அறிவித்தார். மேலும் தர்ஷனுக்கு தலையணை, படுக்கை வழங்குவது குறித்து வருகிற 29-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று கூறி, அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 Comments