ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

 


திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு,பாரதத்தின் முதல் பிரதமராக பணியாற்றி குழந்தைகள் நேரு மாமா என செல்லமாய் அழைக்கப்படும் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம் பள்ளி தலைமை ஆசிரியை E.காவேரி தலைமையில் வெகு விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு நேரு அவர்கள் ஆற்றிய பணிகள் குறித்தும் தியாகத்தை குறித்தும் விளக்கமாக எடுத்து கூறி இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற அவரது கனவு குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.பள்ளியில் பயிலும் அனைத்து மாணவிகளில் பள்ளிக்கு 100% தவறாமல் வருகை தந்த மாணவிகள் 40 பேரும் கெளவரவிக்கப்படு இவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் துணை தலைமை ஆசிரியை சி. ரேவதி உதவி தலைமை ஆசிரியர்கள் எம்.  பாஸ்கர் பாபு,தேவராஜ் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள்ஆசிரிய பெருமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments