அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திறந்து வைத்தார்


திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பொது நிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 12 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நியாய விலை கடையை கட்டி முடிக்கப்பட்டு அதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 தொடர்ந்து நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் பொது மக்களுக்கு பொருட்களை வழங்கினார் இதில் தல அலுவலர் ஹேமலதா செயல் ஆட்சியர் விஜயராகவன் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சரவணன் வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் அஞ்சிவாக்கம் கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கர் சி எஸ் ஆர் இளையராஜா உதவி செயலாளர் தியாகராஜன் பணியாளர் மரகதமணி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments