ஆண்டார்குப்பத்தில் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நா.செல்வ சேகரன், சோழவரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வே. ஆனந்தகுமார் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டனி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கியதை கண்டித்து தமிழக முழுவதும் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதன்படி திருவள்ளூர் கிழக்கு பொன்னேரி மாவட்டம் தொகுதிக்குட்பட்ட ஆண்டார் குப்பம் பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் அறிவுறுத்தலின் பேரில் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நா. செல்வ சேகரன் சோழவரம்மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வே. ஆனந்தகுமார், ஆகியோர் தலைமையில் முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இதில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர்நீக்கி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன கூட்டணியை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் ஆரணி.ரோஸ் பொண்ணையும்.ஆரணி வெங்கடேசன்.சிறுவாபுரி ஜே.எம் ரமேஷ். திமுக முன்னாள் கவுன்சிலர். சந்திரசேகர் கதிரவன் மணிகண்டன் சுதாகர். சுந்தரமூர்த்தி..திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாவட்ட பொறுப்பாளர்கள் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 Comments