திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சி மாதாந்திரக் கூட்டம் தலைவர் M.ராஜேஸ்வரி தலைமையில் துணைத் தலைவர் K. சுகுமார் இளநிலை உதவியாளர் தா. அ. கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023- 24ஆம் ஆண்டு 15- வது நிதிக்குழு டைய்டு மானியம் மூலம், மற்றும் 2025- 26 ஆம் ஆண்டு 6-வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் பேவர் பிளாக்சாலை அமைத்தல்,அங்கன்வாடி கட்டிடம் புனரமைத்தல்,மின்மோட்டார் பைப்புகள் மாற்றியமைத்தல், குப்பைகளை அகற்றும் இயந்திரங்கள் வாங்குதல்,உட்பட 10க்கும் மேற்பட்ட திட்டப்பணிகளுக்காக சுமார் 10 கோடி செலவின பணிகளுக்கான,பணி உத்தரவு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் D. கண்ணதாசன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பூ. சந்தான லட்சுமி குணபூபதி, எஸ்.அருணா நாகராஜ்,D.கௌசல்யா தினேஷ்குமார்,S. பிரபாவதி, K. K. சதீஷ்,சுகன்யா தினேஷ் குமார்,R. சுபாஷினிரவி, P. S.முனுசாமி, R.சுஜாதாரவி, N.ரகுமான்கான் நியமனக்குழு உறுப்பினர் D.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


0 Comments