பணி நேரத்தில் இறக்கும் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10.லட்சம் நிதியுதவி....... அனைத்து தொழிலாளர் சங்க தலைவர் பாலமுருகன் வலியுறுத்தல்......




தமிழ்நாடு தொழிலாளர் ஆதரவு சங்கத்தின் நிறுவனர்/ தலைவர் அ.பாலமுருகன் அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறிய செய்தி குறிப்பு:

திருமணம் ,திருவிழாவினை அலங்கரிக்கும் பணியில் ஈடுபடும்  தொழிலாளர்கள்   மற்றும் பொருட்காட்சியினை அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.வருகின்ற மார்ச் மாதம் திருச்சியில் திருமணம்,திருவிழா பணி தொழிலாளர்கள் மற்றும் பொருட்காட்சி அமைக்கும்  பணியாளர் ,ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட 2 லட்சம் தொழிலாளர் பங்கேற்புடன்  மாநில கோரிக்கை மாநாடு நடத்தப்படும்.

கடும் போட்டியில் சிக்கி தவிக்கும்  ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திட ஆட்டோ கட்டணத்தினை உயர்த்திட வேண்டும்.

திருமணம்,திருவிழா மற்றும் பொருட்காட்சிகளுக்காக டாடா ஏஸ்,லாரிகளில் எடுத்து செல்லப்படும்  பொருட்கள் எடையள்ளவு கம்பியாகவே இருக்கும் ஆனால் உயரம் சற்று  கூடுதலாக இருக்கும் என்பதனை   உணர்ந்து காவல்துறையினர் அபாராதம் விதிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமணம், திருவிழா மற்றும் பொருட்காட்சி அமைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர வட்டி இல்லா கடனை அரசு வழங்கிட வேண்டும்.அறுபது வயதினை கடந்த திருமணம்,திருவிழா அமைப்பு தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிட அரசு முன் வர வேண்டும்.

பணி நேரத்தில் நடைபெறும் விபத்துகளால் ஊனமடையும் தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும்,உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பத்து ரூ 10 லட்சமும் வழங்க வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நிர்வாகிகள் பெயர் பதவி விபரம் மாநில பொதுச் செயலாளர் மணிகண்டன் ( சென்னை ),துணை பொதுச்செயலாளர் அப்துல் நாசர்( திருச்சி ),மாநில கவுரவ ஆலோசகர் தொல்காப்பியன் ( ஈரோடு),மாநில துணைத்தலைவர் மணிவண்ணன்(கோவை) ,கோவிந்தராசன் ( ஓரத்தநாடு)மாநில செயலாளர்கள் சிவக்குமார் ( முத்தரசநல்லூர்) சந்திர சேகர்( திருச்சி),அழகு குமார் ( கீரனூர்)காளிதாஸ்( சிவகங்கை),பொருளாளர் பிரபாகரன் ( தொட்டியம்),ஆட்டோ சங்க திருச்சி மாவட்ட  தலைவர் செந்தூர் பாண்டியன்,பொதுச்செயலாளர் ரஞ்சித் குமார்,செயலாளர் அருண் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயலாளர்கள் ராஜ் ( திருச்சி), ராமச்சந்திரன் ( திருச்சி) மற்றும் நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments