21 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்..... நாகை மாவட்டத்தில் 27 மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை


2004 டிசம்பர் 26 ஆசிய கண்டத்தின் கருப்பு நாள் சுனாமி பேரலை தாக்கியதில் இந்தியாவில் 6065 மனித உயிர்களை பறிகொடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான வாழ்வாதாரர்களை இழந்து நிற்கதியாய் நின்ற மாவட்டம்.

அதனைத் தொடர்ந்து மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளால் தலை நிமிர்ந்த நாகை மாவட்டத்தில் 21 ஆண்டுகளை கடந்தாலும் சுனாமியின் சோக வரலாறு மீனவ மக்களின் மனதில் நீங்காத வடுக்கலாய் மாறியுள்ளது காணமுடிகிறது.

குறிப்பாக நாகை அக்கரைப்பேட்டை கீச்சாங் குப்பம் பகுதியில் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்து பல கோடி மதிப்பிலான படகுகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் 21 ஆண்டுகள் கடந்து இருந்தாலும் மீனவர்கள் முகத்தில் தீராத சோகத்தில் வடுக்கள் காணப்படுகிறது அதிகாலை நேரத்திலேயே ஆயிரக்கணக்கானோர் நடமாடும் இந்த பகுதியில் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்க்கு வர்த்தக நடைபெறும் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சுனாமியாக இருந்த நினைவிடத்திற்கு சென்று பொதுமக்கள் துயரமாக அஞ்சலி செலுத்தி அங்குள்ள ஸூபியை வணங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகை செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments