ராமநாதபுரம்: பெருநாழியில் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு



 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் பெருநாழியில் முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கமுதி அருகே பெருநாழியில் தெற்கு ஒன்றியம் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. தேமுதிக  மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா வழிகாட்டுதலின் படி, தெற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் அறிவுறுத்தலின் பேரில், நடைபெற்ற விழாவில் ஒன்றிய அவை தலைவர் தனபால், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மாரீஸ்வரன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், ஒன்றிய துணை செயலாளர்கள் முனீஸ்வரன், மோகன், கேப்டன் மன்ற ஒன்றிய செயலாளர் மாச்சையன் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Post a Comment

0 Comments