கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் முதலம்பேடு ஊராட்சியில் வருகின்ற 30ம் தேதி தமிழ கத்தின் எதிர் கட்சி தலை வர் எடப்பாடி பழனிசாமி வருகை ஓட்டி எளாவூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிறு னியம் பலராமன், முன் னாள் எம்எல்ஏ கே.எஸ். ஆகியோர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் சுண்ணாம்புகுளம் ஸ்ரீதர் வரவேற்றார். இதில் ஒன்றிய செயலாளர்கள் டி.சி.மகேந்திரன், பல்லவாடா.ஜெ..ரமேஷ்,பேரூர் செயலாளர் ரவி உள்ளிட் டோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மேற்கு மாவட்டசெயலாளரும் முன்னாள் அமைச்சரு மான பி.வி.ரமணா கலந்து கொண்டு வருகின்ற 30ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழகத்தின் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி கிழ்முதலம்பேடு பகு தியில் வருகை தர உள்ளார். அதற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள ஆரம் பாக்கம், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், மாதர்பாக் கம், பாதிரிவேடு பெரியபா ளையம், ஊத்துக்கோட்டை, வெங்கல், கன்னிகைபேருர். ஆத்துப்பாக்கம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் உள்ள பொது மக்கள், அதிமுக தொண்டர் களை வர வைக்கவேண்டும் என்று வரும் தொண்டர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில். எல்லாபுரம் ஒன்றிய செயலாளர்கள் வேதகிரி.கோதண்டம் பிரசாத். கும்மிடிப்பூண்டி நிர்வாகிகள் எஸ்.டி.டி ரவி சியாமளா தன்ராஜ். தீனதயாளன் மு க சேகர். ஏழுமலை. நாகராஜ் ஓடை ராஜேந்திரன்.சங்கர். சுரேஷ் முரளி. கோபி உள்ளிட்ட முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.இறுதியில் தெற்கு ஒன்றிய செயலாளர் டி.சி.மகேந் திரன் நன்றி கூறினார்.




0 Comments