பொன்னேரி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மெகா லோக் அதாலத்தில் 3,31,43,066 ரூபாய்க்கு உடனடி தீர்வு


திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சார்பு நீதிமன்றத்தில்  தேசிய மெகா லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வு காணும் வகையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தேசிய மெகா லோக் அதாலத் நிலுவை வழக்குகள் 871எடுக்கப்பட்டு நடத்தப்பட்டது,அதில் 520 வழக்குகள்,இந்த வழக்குகளில் 20 ஆண்டுக்கு முன்புள்ள பழைய அசல் (ஓ.எஸ்.வழக்கு) 2 வழக்குகள் தீர்க்கப்பட்டன.தீர்வு தொகை ரூ.2,67,37,066/-மற்றும் முன் வழக்குகள் 33 கோப்புக்கு எடுக்கப்பட்டு நடத்தப்பட்டத்தில் தீர்வு தொகை ரூபாய் 64,06,000/-ஆக மொத்தம் ரூபாய் 3,31,43,066/-க்கு தீர்வு காணப்பட்டது.

பொன்னேரி தாலுகாவில் உள்ள நீதித்துறை அதிகாரிகள் மாண்புமிகு முதன்மை சார்பு நீதிபதி செல்வி ஆர்.ஜெகதீஸ்வரி,கூடுதல் சார்பு நீதிபதி திருமதி எழிலரசி,மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வி. எ.கீர்த்தனா, நீதித்துறை  நடுவர்கள் திருமதி எஸ். மஞ்சுளா,திருமதி.சரண்யா செல்வம் என 4 அமர்வுகள் அமைக்கப்பட்டு கோப்புகள் எடுக்கப்பட்ட வழக்குகள்,மோட்டார் வாகன விபத்து , சிசி (காலண்டர் வழக்குகள்),மாற்றுமுறை ஆவண சட்ட,ஜீவனாம்சம்,நில ஆர்ஜித மற்றும் அசல் வழக்குகள் ஆகியவை வழக்குகள் கோப்புகள் எடுக்கப்பட்டு தேசிய மெகா லோக் அதாலத்தில் வழக்குரைஞர்கள்,அரசு வழக்குரைஞர்கள்,காப்பீடு அலுவலக வழக்குறைஞர்கள்,வட்ட சட்ட பணிகள்ஆணைக்குழு சார்ந்த வழக்கரிஞ்ச ர்கள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்காடிகள் முன்னிலையில் தீர்க்கப்பட்டன.இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொன்னேரி வட்ட சட்ட பணிக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் துளசிராமன்,அரசு தரப்பு வழக்கறிஞர் பல்லவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments