தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மற்றும் கம்பம் நகர தலைவர் துரை. தங்கமாயன் ஆலோசனை படி கம்பம் நகர தவெக சர்பில் நகரத்தில் உள்ள 33 வார்டு பகுதிகளில் 37 இடங்களில் தவெக கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை வடக்கு நகர செயலாளர் சண்முகராஜா தெற்கு நகர செயலாளர் சதீஸ் குமார் தலைமை தாங்கினர், இதில் சிறப்பு அழைப்பாளராக மதுரை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் சந்தர் கலந்து கொண்டு கழக கொடியை ஏற்றினார்.இந்நிகழ்சியில் கம்பம் நகர நிர்வாகிகள், முகேஷ்ராஜா,அபூ, ஹரீஸ், அபினேஷ், ஆனந்தன், பிரபாவதி, வைத்தீஸ்வரி உள்ளிட்ட ஏராளமான தவெகவினர் கலந்து கொண்டனர்.
0 Comments