சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன் தலைமையில், நகரச் செயலாளர் இப்ராம்சா, ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் அதிமுகவினர் இரு இடங்களில் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முதலாவதாக காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தவர்கள், தொடர்ந்து அங்கிருந்து பேருந்து நிலையம், மதுரை ரோடு வழியாக அமைதி ஊர்வலமாக வந்து அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட சேரமன் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், சிங்கம்புணரி முன்னாள் ஒன்றிய சேர்மன் திவ்யா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 Comments