எம்ஜிஆரின் 38 வது நினைவு தினம்..... நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் திருக்கோவிலில் அதிமுக மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் தச்சை.கணேசராஜா அன்னதானம் வழங்கினார்


தமிழக முழுவதும் புரட்சித் தலைவரின் 38 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாநகர் முழுவதும் கழக நிர்வாகிகளால் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த திருவுரு படத்திற்க்கு மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை. கணேசராஜா மாலை அணிந்து, மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் திருக்கோவில் அன்னதான கூடத்தில் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானத்தில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை. கணேசராஜா பக்தர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் சுதா கே. பரமசிவம், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர், பள்ளமடை பாலமுருகன், மானூர் ஒன்றிய கழகச் செயலாளர் துறையூர் சேகர், மாணவர் அணி மாநகர் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments