சிவகங்கை: 50 ஆண்டுகளாக மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி வரும் கிராம மக்கள்


உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.அதனை ஒட்டி இன்று சிவகங்கை மாவட்டம் சருகனி அருகே உள்ள கீழஉச்சாணி கிராமத்தில் பல மதத்தை சேர்ந்த ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக அதிக எண்ணிக்கையுடன் கிறிஸ்த்துவ மக்கள் அதிக அளவில் இப்பகுதியில் உள்ளனர்.  இங்கு கடந்த 50 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கு உள்ள இங்குள்ள கிறிஸ்தவ மக்கள் சாதி மத வேறுபாடு இன்றி தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு சிவகங்கை மறை மாவட்டம் புனித அன்னாள் சுவக்கீன் ஆலயத்தின்பங்கு தந்தை சேசுராஜ் கிருஸ்டி வழிகாட்டுதலின் படி திருச்சபை மக்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மேளதாளங்களுடன்  ஊர்வலமாக கையில் குழந்தை இயேசுவை சுமந்து கொண்டு கிராமம் முழுவதும்  சாதி மத வேறுபாடு இன்றி அனைத்து சமுதாய மக்களின் வீடுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறி இனிப்புகளை வழங்கியும் மரக்கன்றுகளை வழங்கியும் தங்களது வாழ்த்துக்களை கூறினார்கள்.

 இந்த மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா வருங்கால தலைமுறைகள் தொடர்ந்து செய்து வருவது சிறப்புக்குரியதாகும். இந்த மத நல்லிணக்க விழாவில் கிராம பங்கு இளைஞர்கள் மற்றும் அருட்குடும்ப சகோதரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இரவு பங்கு தந்தை சேசுராஜ் கிறிஸ்டி திருப்பலி பூசைகள் நடத்தினார். இறுதியில் இறைமக்கள் அனைவரும் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Post a Comment

0 Comments