தேனி மாவட்டம், குமுளியில் போக்குவரத்துத்துறை சார்பில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குமுளியில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கூடலூர் நகர்மன்றத் தலைவர் திருமதி பத்மாவதி லோகந்துரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குநர்(மதுரை), சரவணன், பொதுமேலாளர் (திண்டுக்கல் மண்டலம்) முத்துக்கிருஷ்ணன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, கோட்ட மேலாளர்கள் ஜெகதீசன், நடராஜன், கிளை மேலாளர் (குமுளி) முருகேசன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments