வேளாங்கண்ணியில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் 6 தேதி முதல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமையாக பங்கேற்கும் என அறிவிப்பு



தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக்  அவசரக் கூட்டம் இன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  மாநிலப் பொதுச்செயலாளர் மயில் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் திருச்சி, கோவை, சென்னை,மதுரை,உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், 

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கையிலேயே கூறியுள்ளது. 

எனவே, தி.மு.க அரசு உடனடியாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான கடந்த ஊதியத்தை வழங்கிட வேண்டும்.

60 ஆண்டுகளாக தொடக்கக்கல்வித்துறையில் நடைமுறையில் இருந்த ஒன்றிய முன்னுரிமையை மாற்றி வெளியிடப்பட்ட அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும்,  தொடக்கக்கல்வித்துறையில் அரசாணைகளுக்கு முரணாக விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைத் தடைகளை உடனடியாக ரத்து செய்து ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6 முதல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களும் முழுமையாகப் பங்கேற்பதென மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் கடந்த 22.12.2025 அன்று சென்னையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் கோரிக்கைகள் தொடர்பாக மூன்று அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சில சங்கங்களை மட்டும் பேச அனுமதித்து விட்டு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட வலிமையான பல சங்கங்களை பேசுவதற்கு கூட அனுமதிக்காததை மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்பன உள்ளிட்ட மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாகப்பட்டினம் செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி 

Post a Comment

0 Comments