தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம் லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரோஸி வித்யாலயா சிபிஎஸ்இ (CBSE) பள்ளியின் 9-ஆம் ஆண்டு 'சிருஷ்டி 2026' ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு டாக்டர் முத்து குகன் MD தலைமை தாங்கினார். எஸ். ஐஸ்வர்யா BE முன்னிலை வகித்து விழாவை சிறப்பித்தார்.
பிரபலத் திரைப்பட நடிகர் இளைய திலகம் பிரபு மற்றும் அவரது துணைவியார் புனிதவதி பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, மாணவர்களின் திறமைகளைப் பாராட்டிப் பேசினர். பள்ளியின் தாளாளர் ஓ. ராஜா கலந்து கொண்டு விழாவினை ஒருங்கிணைத்து சிறப்பித்தார்.
இந்த விழாவில், பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments