ராமநாதபுரம்: குடிநீர்பாதிப்பால் போத்தநதி கிராமமே கிட்னிபாதிப்பு அதிர்ச்சியில் கிராமமக்கள்


ராமநாதபுரம் மாவட்டம் கமுதிஊராட்சிஒன்றியத்தில் உள்ளது வல்லந்தை ஊராட்சி இந்தஊராட்சியில் உள்ளது போத்தநதி கிராமம்  இங்கு சுமார் 270 குடும்பத்தினரும் சுமார் 500 மக்களுக்கு மேல் வசிக்கின்றனர்  இந்த கிராமமக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டி சுமார் 13 வருடங்களாக தண்ணீர் சப்பளை வருகின்றது ஆனால் இந்த தண்ணீர் தொட்டியை  நான்கு வருடங்களாக சுத்தம்  செய்யவில்லை என கிராம பொதுமக்கள் கூறுகின்றனர்.

 இதுகுறித்து வெங்கடேஷ்  என்பவர்  கூறியதாவது அரசு கண்மாய்கரை அருகே மற்றும் இருஇடத்தில் போர்வெல் அமைத்து குடிதண்ணீருக்கு செய்துதந்தனர்.இந்த தண்ணீரை பொதுமக்கள் கடந்த பத்துவருடமாக குடித்துவந்தனர் இதனால் பலமக்கள் கிட்னிபாதிப்பால் இறந்துபோனார்கள்  இன்னமும் நிறைய பொதுமக்கள் டயாலிசீஸ் செய்து வருகின்றனர் இதனால் கிராமத்தில் பொதுமக்கள்  வாழபயந்து திருப்பூர் கோவை வீரசோழன் ஆகிய ஊர்களுக்கு சென்விட்டனர்  இதற்கு காரணம் குடிதண்ணீர்தான் என ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

 ஆகவே தமிழகஅரசும் மாவட்டநிர்வாகமும் தூரித நடவடிக்கை எடுத்து தண்ணீரை சோதனைக்கு அனுப்பி பாதிப்பு என்றால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையோ காவேரிகூட்டுகுடிநீர் தண்ணீரையோ வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனகூறினார் நாமும் ஊரினை சுற்றி பார்த்து  பொதுமக்கள் கருத்தை கேட்டோம்  அவர்கள் டயாலிசீஸ் செய்து கொண்டே சிலர் வாழ்கின்றனர் ஆகவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் ஊர் பொதுமக்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்  தமிழகஅரசு இதில் உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீரின் பாதிப்பில் இருந்து கிராமமக்களை காப்பாற்றவேண்டும் மேலும் மருத்துவகுழுவினரை அனுப்பி அனைவரையும் சோதனைகள் செய்து மருத்து மாத்திரைகளை வழங்கிட வேண்டும் என இந்த பகுதி சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments