இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் மத்திய அரசு அறிவித்த கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி கலந்து கொண்டார். மேலும் மாவட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய பார்வையாளர் சேதுராமு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மாநில திட்டங்கள் உறுப்பினர் சத்தியமூர்த்தி, விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் இளையராஜா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயளாலர் முத்துலிங்கம், முன்னாள் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் நாகூர் பாண்டியன், கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் டாக்டர். ஸ்டாலின், கடலாடி வடக்கு ஒன்றிய தலைவர் முருகன், முன்னாள் இராணுவ பிரிவு மாவட்ட தலைவர் மேகசெல்வம், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார், கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவர் பசும்பொன் ராமமூர்த்தி, பட்டியலணி மாவட்ட பொதுச்செயலாளர் காளிராஜா, சிறுபான்மையணி மாவட்ட துணைத் தலைவர் பொன்னையா சபரி முத்து, முன்னாள் ராணுவ பிரிவு மாவட்டச் செயலாளர் சந்தன பாண்டி, அமைப்புசாரா பிரிவு மாவட்ட செயலாளர் சரவணகுமார், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் கவிக்குமார், முனியசாமி, ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம், பட்டியல் அணி ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணம், பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் வேம்புதுரை, சக்தி கேந்திர பொறுப்பாளர் தென்னவன், தேரிருவேலி கிளை தலைவர் சுரேஷ் பாபு, மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சக்திகேந்திர பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள், BLA 2, நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.



0 Comments