பத்தமடை அருகே பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்


திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் அறிவுறுத்தலின் படி, மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பத்தமடை காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பெண்கள் உதவி மையம் 181 என்ற இலவச தொலைப்பேசி எண் குறித்தும், குழந்தை திருமணம், போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவலன் SOS செயலி குறித்தும், குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Post a Comment

0 Comments