அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி,தமிழ்நாடு வனத்துறை,அரியலூர் வனக்கோட்டம் சார்பில்,பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிட் இணைந்து நடத்தும்,மரம் நடும் பசுமை விழாவினை முன்னிட்டு,மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.இரத்தினசாமி , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் ஆ.ரா.சிவராமன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது ) பரிமளம்,ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள்,வனத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


0 Comments