அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஜெ.தத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து அதன் மூலம் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.அந்த இயந்திரம் ஒரு வருட காலமாக இயந்திரம் பழுது பட்டு இருந்த நிலையில் மீண்டும் பொது மக்கள் கோரிக்கை ஏற்று அந்த இயந்திரம் பழுது நீக்கம் செய்யப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன் கலந்து கொண்டு சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் மூலம் சுத்தமான குடிநீரை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் பழனிச்சாமி, தமிழ் நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் மாவட்ட தலைவர் டாக்டர் உத்தமராசு மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி ( பொறுப்பு) பாலகுரு அனைவருக்கும் நன்றி கூறினார்.



0 Comments