கமுதி அருகே சாலைவிபத்தில் தம்பதி உயிரிழப்பு

                 


        





 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேநடந்த சாலை விபத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்       கமுதி அருகேயுள்ள சம்பகுளம் கிராமத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் கிழவன் 45 இவரது மனைவி ஜோதிமுத்து 38 இவர்கள் கமுதி மேட்டுத்தெருவில் உள்ள வாடகைவீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர் இவர்கள் இருவரும் நேற்று மாலை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டு கமுதிநோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தனர்.

வரும் போது மேலராமநதிஅருகே பழுதாகி லாரி நின்றிருந்தது  அப்போது நிலைதடுமாறி லாரின் பின்னால் இருசக்கர வாகனம் மோதியது  இதில் கணவன் மனைவி இருவரும்  சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர்  இவர்களுக்கு ஒருமகனும் மகளும் உள்ளனர் இறந்தவர்களின் உடலை கமுதி போலீசார் உடல் கூறாய்வுக்காக.      கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்  மேலும் இதுகுறித்து வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்  இரண்டு பிள்ளைகளை விட்டு விட்டு விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments