தூத்துக்குடியில் ஓவிய ஆசிரியர் வீட்டில் புதுமையான மெகா விழிப்புணர்வு குடில்

  


தூத்துக்குடியில்  ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்  இசிதோர் பெர்ணான்டோ அவர்கள்  வீட்டில்  ஒவ்வொரு ஆண்டும் புதுமையான மெகா குடில் செய்வது வழக்கம் அது போல்  இன்று    22  வது  ஆண்டாக     மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யேசு பாலனின் குடில் அமைத்து  உள்ளார்.

அது போல்  இந்த ஆண்டு  இறைவனால் படைத்த இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் வாழ உரிமை உள்ளது படைக்கப்பட்ட எல்லா உயிர்களும்  மனிதன் மட்டும் அல்ல விலங்குகள் பறவைகள் மரங்கள் கடல் வாழ் உயிரினங்கள்  சிறு பூச்சிகள்  மற்றும் மனிதர்கள் அனைவருக்கும் சொந்தமானது. எல்லா உயிர்களும் இறைவன் படைப்பில் சமமே என்ற உணர்வை சிந்திக்கும்படியாக    அனைத்தும் யேசு பாலனை தரிசிக்க வந்தால்  என்ற கற்பனையில்  குடில்   அருமையாக அமைத்து உள்ளார்.




Post a Comment

0 Comments