தூத்துக்குடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட தலைவர் மீராசா தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கி ேபசுகையில் 24 மணி நேரமும் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நாங்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறோம் ஆகையால் தமிழகம் அனைத்து துறையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது மேலும் மதசார்பற்ற இந்த கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற ஒரே குறிக்கோளுடன் அதிமுக பிஜேபி செயல்பட்டு வருகிறது ஆகையால் நாம் ஒற்றுமையுடன் இருந்து ஒரு வாக்கு கூடவும் சிதறாமல் நம் கூட்டணிக்கு அனைத்து வாக்குகளும் கிடைக்க நாம் உழைக்க வேண்டும் மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்திட அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினாா்.
பொதுச் செயலாளர் அபூபக்கர் கட்சி நிர்வாகிகள் வரும் 2026 தேர்தலில் இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு திமுக கூட்டணி மீண்டும் அமோகமாக வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வருகிற ஜனவரி 28ம் தேதி கும்பகோணத்தில் மகத்துல்லா ஜமாத் மாநாடு நடைபெறவுள்ளது இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிற்கிறார் இதில் இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவார் திராவிட மாடல் அரசில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். புதிதாக அரசியலுக்கு வந்த நடிகர் விஜய்க்கு இஸ்லாமியர்களின் ஒரு வாக்கு கூட கிைடக்காது அவர் ஸ்ட்ரெந்த் என்பது இதுவரை தெரியவில்லை அவரை நம்பி யாரும் வாக்களிக்க தயாராக இல்லை சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு வாக்கு அளிப்போம் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு திராவிட மாடல் ஆட்சி தான் காரணம் கிறிஸ்மஸ் பண்டிகை கூட ஒவ்வொரு இடத்திலும் கலவரம் உண்டாக்கி விட்டார்கள் மோடி கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்துகிறார் ஆனால் மற்ற இடங்களில் கலவரம் நடக்கிறது தமிழ்நாட்டில் எப்படியாவது நுழைந்து விடலாம் என்று நினைக்கிறார்கள் அது கனவிலும் நடக்காது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எப்பொழுதும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருக்கும் என்றார்.
கூட்டத்தில் மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், கவுன்சிலா் மும்தாஜ் முன்னாள் பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், நிர்வாகிகள் ரகுமான், மீராசா, மற்றும் மணி அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

0 Comments