தமிழகத்தில் 2026 தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் விசிக, காங்கிரஸ், சிபிஎம், மநீம, இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி, மதிமுக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட 16 கட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு கட்சி இணைந்துள்ளது.அதன்படி நமது மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த அந்த கட்சி நிறுவனர் ஜெகநாத் மிஸ்ரா 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் வெற்றிக்காக பாடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

0 Comments