தேனி மாவட்டம் கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மருத்துவ முகாமை, நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.கட்சியின் துணை பொதுச்செயலாளர் கூடல் செல்வேந்திரன் முன்னிலை வகித்தார்.கம்பம் நகர செயலாளர்கள் அய்யர், சுப்பிரமணி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர் அசோக்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு பொது மருத்துவம் கண் மருத்துவம் சர்க்கரை நோய் இருதய நோய்கள் மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சைகள் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள்.சிகிச்சை பெற்றவர்களுக்கு மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில்,மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் நந்தகுமார்,கம்பம் தொகுதி செயலாளர் E.M.S .அபுதாகீர்,மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அருண்குமார்,மாவட்ட இளைஞரணி செயலாளர் தங்கபாண்டி,கம்பம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் அப்ரிடி,மாவட்ட மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணவேணி,மனித நேயமக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி மாவட்ட பொதுசெயலாளர் சாதிக்அலி மாவட்ட செயலாளர் தாவு த்நிஸார்,மாநிலபொது செயலாளர் யாசர் அரபாத் த.மு.மு.க நகர தலைவர் ஜெய்லானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments