சிவகங்கை: மகாத்மா காந்தியின் பெயரை நீக்க கூடாது...... திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்.....


தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் 100 நாள் வேலை திட்டம் தமிழகத்தில் இல்லை என்றும், மகாத்மா காந்தியின் பெயரை நீக்க கூடாது என கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட திமுக கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் புது வயலில் ஒன்றிய செயலாளர் சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.

 இதில் கண்டன முழக்கங்களாக, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாசிச பாஜகுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்றும், முடக்காதே முடக்காதே 100 நாள் வேலையை முடக்காதே, குறைக்காதே குறைக்காதே தமிழ்நாட்டிற்கு வழங்கும் நிதியை குறைக்காதே, வைத்தனர், இதில் திமுகவைச் சேர்ந்த காரைக்குடி துணை மேயர் குணசேகரன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, புதுவயல் பேரூராட்சி தலைவர் முகமது மீரா, பகுருதீன் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இளைய கவுதமன், மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டதோடு, பெருந்தளாக பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments