ராமநாதபுரம்: மண்டலமாணிக்கத்தில் என்வாக்குசாவடி வெற்றிவாக்குசாவடி பரப்புரை...... ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமையில் நடந்தது.....




 தமிழகத்தில் திமுக சார்பில் நடைபெற்று வரும் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி முன்னெடுக்கும் விதத்தில்,தமிழக முதல்வர், திமுகழக தலைவருமான மு.க.ஸ்டாலின்  ஆணைக்கிணங்கவும் , துணை முதல்வரும் திமுக இளைஞர் அணி தலைவருமான  உதயநிதி ஸ்டாலின்  கட்டளைக்கிணங்கவும்  ராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளரும்சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம்  அறிவுறுத்தலின் படியும் , பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் கமுதி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்டலமாணிக்கம்,பூத் எண்கள். 298,297 ஆகிய வாக்கு சாவடிகளில்,  என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்து கூறி சிறப்புரையாற்றினார். 


கமுதி வடக்கு ஒன்றிய. திமுக செயலாளர் வாசுதேவன்  நிகழ்வில்   கமுதி ஒன்றிய முன்னாள்  பெருந்தலைவர்  தமிழ்செல்விபோஸ் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் திருநீலகண்டன்  மற்றும் நிர்வாகிகள் ,ஊராட்சி மன்றதலைவர்கள்,  கவுன்சிலர்கள், கிளைகழகநிர்வாகிகள்,BLA2, BLC,BDA நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புற வாக்குசாவடி முன்னெடுப்பு நடைபெற்றது இதில் ஏராளமான மகளிரணி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments