உலகத் திருக்குறள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு விழா

 





உலகத் திருக்குறள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு விழா. கன்னியாகுமரி குமரி வரலாற்றுக் கூடத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் கவிஞானி மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. 

கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்கள் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு கலை இலக்கியக் கழக இரா. முத்துலிங்கம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார், துணைத் தலைவர் பிச்சி ஆதிலிங்கம் குறள் வாழ்த்துப் பாடினார். 

பொதுச்செயலாளர் பேராசிரியர் ஆதிலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். தேர்தல் ஆணையர்கள்    கௌரவிக்கப்பட்டனர்.

திருக்குறள் மாத இதழ், மருத்துவர் செண்பகம் எழுதிய உயிரோம்பும் வான் மறை என்னும் நூல், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு நாள்காட்டி, முன்னாள் தலைவர் வெ. சேகர் நினைவு நூல் ஆகியவை வெளியிடப்பட்டது. 

நாகர்கோவில் மாநகர மாநகரத்தந்தை மகேஷ், கன்னியாகுமரி நகர்மன்றத் தலைவர் எஸ். ஸ்டீபன் பொறுப்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். 

பொருளாளர் நல்லாசிரியர் பெ. சௌந்தரராசன், ஒருங்கிணைப்பாளர் தமிழரிமா அதா. சம்பத், சிறப்புத் தலைவர் இராம கோவிந்தன், அமைப்புச் செயலாளர் வ. காசிநாதன், தலைமைக் கரண ஆசான் பேராசிரியர் கருத்தப்பாண்டி, தலைமை நிலையச் செயலாளர்கள் முனைவர் க. சின்னதுரை, இரா. சிவஞானபாண்டியன்,  முதுமுனைவர் பா. வளன்அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

துணைத்தலைவர்கள் சீனி. பழமலை, கோ. வெங்கடேசன், எ. ஆசைத்தம்பி, துணைப்பொதுச்செயலாளர்கள் இரா. வனிதா, இரா. திருமூர்த்தி, மற்றும் மாவட்ட நிருவாகிகள் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்

துணைப் பொதுச்செயலாளர் ரெ. ராசகோபால் நன்றியுரை ஆற்றினார். 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பத்திரிக்கையாளர் அ. இ. தாகூர், தலைமைத் துறை இயக்குநர் கவிஞர் முல்லை செல்லதுரை, நாகர்கோவில் மாநகர் மாவட்டத் தலைவர் கவிஞர் முகிலை பாசிறி, ஆகியோர் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 

கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டன. 

தீர்மானம் 1 : உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் முன்னாள் தலைவர் திரு. வெ. சேகர் அவர்களுக்கு கலைஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் உயரிய விருதான “கலைமாமணி” விருதை வழங்க வேண்டும். 

தீர்மானம் 2 : அண்மையில் குமரிமாவட்டம் வள்ளியாற்றின் படுகை அருகே , செம்பவளம் ஆய்வு தளத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர். பைசல் தலைமையிலான குழு மேற்புற கள ஆய்வை மேற்கொண்டது. *9000* ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குமரி மாவட்டத்தில் மனிதர்கள் வாழ்வு இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. தமிழக தொல்லியல் துறை குமரி மாவட்டத்தில் விரிவான அகழாய்வுகளை மேற்கொள்ள வேண்டும். 

தீர்மானம் 3 : கன்னியாகுமரியில் வானூர்தி நிலையம் அமைக்க வேண்டும். 

தீர்மானம் 4 : சென்னை - திருநெல்வேலி, சென்னை - நாகர்கோவில் வரை வந்து செல்லும் வந்தே பாரத் விரைவு தொடர்வண்டியை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். 

தீர்மானம். 5 : அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் திருவள்ளுவர் சிலையை வைத்து தினமும் காலை நிகழ்வில் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தக் கோருதல். 

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments