தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

 


தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் முத்துலாபுரம் ஊராட்சி பகுதியில், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தலின்படி, தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா .நல்லதம்பி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார் ஆகியோரின் ஆலோசனையின் படி, தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. 

இந்த புகைப்பட கண்காட்சியில், தமிழக அரசின் சாதனை திட்டங்களான நான் முதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிர் விலையில்லா விடியல் பேருந்து பயணத்திட்டம், மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், பயன்பெற்ற பயனாளிகளின் விபரங்கள் குறித்தும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் செய்தி குறிப்புகளை ஆச்சரியத்துடன் கண்டுக்களித்தனர். 

இந்த புகைப்பட கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா .நல்லதம்பி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகப் பணியாளர்கள் சிறப்பாக பணிகளை மேற்கொண்டனர்.

Post a Comment

0 Comments