தேனியில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா



தேனி அருகே பழனிசெட்டிபட்டி சந்திர பாண்டியன் மஹாலில், மாற்றுக் கட்சியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி ஏற்பாட்டில் 1000க்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

இந்த நிகழ்வில், தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி வரவேற்புரை ஆற்றினார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ். சரவணன் குமார், தேனி நகர செயலாளர் நாராயணபாண்டியன், பூதிப்புரம் பேரூராட்சி சேர்மன் கவியரசு பால்பாண்டியன், மார்க்கையன்கோட்டை பேரூராட்சி சேர்மன் O. A. முருகன், மற்றும் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments