ராமநாதபுரம்: பேரையூரில் புதிய மின்மாற்றி செயல்பாட்டினை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் பகுதியில் உயர் மின் அழுத்தத்தை குறைக்கும் வகையில், புதிய மின்மாற்றி அமைத்து தரவேண்டும் என்று   அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில், புதியமின் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்செயல்பாட்டினை நேற்றுஅமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார். 

உடன் திமுக கமுதி மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், முதுகுளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஹரி முத்துராமலிங்கம் செயற் பொறியாளர் பாலமுருகன்,உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி மின் பொறியாளர்கள் முருகன்,சாதிக்,ஒன்றிய துணைச் செயலாளர் தங்கப்பாண்டியன், பாக்குவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேல்ராமன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுலைமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments